×

24வது வார்டு பகுதியில் சாலை பணிகளை விரைந்து முடிக்க மனு

 

திருப்பூர், அக்.14: பாஜ 24-வது வார்டு சாமுண்டிபுரம் பகுதி மக்கள் சார்பில் முதலாம் மண்டல உதவி கமிஷனரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாநகராட்சி, முதலாவது மண்டலம், 24 வது வார்டுக்குட்பட்ட சாமுண்டிபுரம் 2-வது வீதியில் தார்சாலை அமைப்பதற்காக ஜல்லிகற்கள் சாலையில் கொட்டப்பட்டு பரப்பி உள்ளனர். கடந்த ஒரு மாதமாக வேலைகள் தொடங்காததால் நடப்பதற்கும், வண்டி வாகனங்கள் செல்லுவதற்கும் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், அறிவொளி நகர் முதல் மற்றும் இரண்டாவது வீதி மற்றும் சக்தி மாவு மில் உள்ள குறுக்கு வீதி, முருங்கை தோட்டம், அமரன் மழலையர் பள்ளி அருகில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் ரோட்டை குடிநீர் குழாய் அமைக்க தோண்டப்பட்டு ரோடு சேதமடைந்துள்ளது. அதனையும் சரி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : Ward 24 ,Tiruppur ,First Zone ,Assistant Commissioner ,Ward 24 Chamundipuram ,BJP ,Tiruppur Corporation ,24th Ward ,Chamundipuram 2nd Road ,Jallikalgal Road ,
× RELATED இ-சேவை மையத்தில் லேப்டாப் திருடியவர் கைது