×

மதுபோதையில் வாகனம் ஓட்டிய 57 பேருக்கு ரூ3.50 லட்சம் அபராதம் வேலூர் மாவட்டத்தில் ஒரு மாதத்தில்

 

 

வேலூர், அக்.13: வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மது போதையில் வாகன ஓட்டிய 57 பேருக்கு போலீசார் ரூ 3.50லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக மது போதை வாகன ஓட்டிகளை அடையாளம் காணும் வகையில் ‘பிரீத் அனலைசர்’ என்ற கருவி போக்குவரத்து போலீசாரிடம் வழங்கப்பட்டுள்ளது. இக்கருவியை பயன்படுத்தி மது போதையில் வரும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
அதன்படி கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஒரு மாத காலத்தில் வேலூர் மாவட்டத்தில் 57 போதை வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் 35 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஒருவழிப்பாைதயில் வாகனங்களை ஓட்டி வருவோர், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்து விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags : Vellore ,Vellore district ,
× RELATED ஆன்லைனில் ரூ.11.46 லட்சம் இழந்த கல்லூரி...