×

திரளான பக்தர்கள் தரிசனம்

கும்பகோணம், டிச.28: தொலைபேசியில் மிரட்டியதாக காடுவெட்டி குரு மகன் மீது வன்னியர் சங்க தலைவர் போலீசில் அளித்துள்ள புகாரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் ஆடுதுறை மருத்துவக்குடி பகுதியை சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவராக உள்ள இவர், மேற்கு காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கும்பகோணம் கர்ணக்கொல்லை தெருவில் உள்ள வன்னியர் சங்க கட்டிடத்தில் பாமக வன்னியர் சங்க ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டேன். அப்பொழுது வெளியில் சத்தம் கேட்டு போய் பார்த்தபோது அங்கு அதே பகுதியை சேர்ந்த சிவா, முரளி ஆகியோர் எனது கார் டிரைவர் ராஜ்குமாரை தாக்கினர். நான், மாநில துணை பொது செயலாளர் வெங்கட்ராமன் ஆகியோர் சென்று விளக்கினோம்.

அப்பொழுது அங்கு வந்த காடுவெட்டி குரு மகன் கனலரசன் மற்றும் 4 பேர் தரைக்குறைவான வார்த்தைகளால் பேசி என்னை மிரட்டினர். நான் பிரச்னை வேண்டாம் பிறகு பேசி சுமூகமாக தீர்த்துக்கொள்ளளாம் என்று அமைதிப்படுத்தி விட்டு வந்து விட்டேன். பின்னர் கூட்டத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அப்பொழுது தொலைபேசியில் தொடர்புகொண்ட காடுவெட்டி மகன் கனலரசன், சம்பந்தப்பட்டவர்களை உடனே என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் இரவுக்குள் எல்லோரையும் கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டல் விடுத்தார். அதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.  காடுவெட்டி குரு மகன் மீது வன்னியர் சங்க தலைவர் போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Darshan ,devotees ,
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே