×

அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்டி கலெக்டர் தொடங்கிவைத்தார்

பெரம்பலூர், அக். 12: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் மிதிவண்டிப்போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இதில் 13 வயது வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 15 கி.மீ தூரமும், பெண்களுக்கு 10 கி.மீ தூரமும், 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 20 கி.மீ தூரமும், பெண்களுக்கு 15 கி.மீ தூரமும் 17 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு 20 கி.மீ தூரமும், பெண்களுக்கு 15 கி.மீ தூரமும் நடத்தப்பட்ட இப்போட்டியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் தொடங்கி பாலக்கரை வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது. மிதி வண்டி போட்டியில் வெற்றிப்பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000 ம் இரண்டாம் பரிசாக ரூ.3,000 ம், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- ம், நான்காம் இடம் முதல் பத்தாம் இடம் பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 வீதமும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கான ஆணைகளையும், பாராட்டுச்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அட்மா தலைவர் ஜெகதீசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பொற்கொடி, உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Anna ,PERAMBALUR ,Tamil Nadu Sports Development Authority ,
× RELATED இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 70...