×

புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.12: அகவிலைப்படியை 30 சதவிகிதமாக உயர்த்தக் கோரி, புதுக்கோட்டையில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் ராஜேந்திரன், தேசியத் தலைவர் வரதராஜன், மாவட்டச் செயலர் வீரமுத்து உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர். தமிழக அரசு வழங்கிய 16 சதவிகித அகவிலைப்படியில், 10 சதவிகிதத்தை மட்டுமே இஎம்ஆர்ஐ என்ற ஆம்புலன்ஸ் நிர்வாகம் வழங்கியுள்ளது. அகவிலைப்படியை 30 சதவிகிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags : 108 Ambulance Workers Protest ,Pudukkottai ,108 Ambulance Workers Association ,Chinnappa Park ,Rajesh ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா