×

திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம்: தூத்துக்குடிக்கு அக்.27 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நடப்பதை ஒட்டி அக்.27ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 22ம் தேதி தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 27ம் தேதியும், திருக்கல்யாணம் 28ம் தேதியும் நடைபெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்காக கோவில் சாா்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்ச்சியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுவதை முன்னிட்டு 2710.2025, திங்கட்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலவாணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல என தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதிலாக 8.11.2025 இரண்டாவது சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Tags : Soorasamharam ,Tiruchendur temple ,Thoothukudi ,Kandashashti festival ,Tiruchendur Subramaniaswamy temple ,
× RELATED கேரம் உலகக் கோப்பை போட்டியில்...