×

நீர்நிலையில் அரசு அலுவலகம் கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை வெளியிடுக: ஐகோர்ட்!

சென்னை: நீர்நிலையில் அரசு அலுவலகம் கட்ட அனுமதித்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என்று அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து நிதி இழப்பு வசூலிக்கப்படும் என சுற்றறிக்கை வெளியிடவும் ஆணையிடப்பட்டுள்ளது. நீர்நிலை என பதிவு செய்யப்பட்டுள்ள நிலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதாக கூறி மயிலாடுதுறையைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். நீர்நிலைகளில் கட்டப்பட்ட அலுவலகங்களை இடம் மற்றுவது குறித்து 8 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : iCourt ,Chennai ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் மதகுகளை இயக்கி துணைக்குழு ஆய்வு