×

கனமழை எதிரொலி.. ஜவ்வாது மலை மற்றும் பொன்னை ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

திருவண்ணாமலை: ஜவ்வாது மலை பகுதியில் கனமழையால் செண்பகத்தோப்பு அணைக்கு 900 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கனமழையால் அரக்கோணம் மாவட்டம் பொன்னை ஆற்றில் வினாடிக்கு 6480 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பொன்னை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாதாண்டகுப்பம், பொன்னை, கீரைசாத்து, வெப்பாலை, குகையநல்லூர், திருவலம், வசூர், கொண்டாக்குப்பம், ஏகாம்பரநல்லூர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Tags : Jawwatu Mountain ,Ponnai River ,Tiruvannamalai ,Chendpakathopu Dam ,Jawwadu ,Water Department ,Arakonam district ,
× RELATED இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி –...