×

மின் கம்பங்களில் விளம்பர தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்

 

மன்னார்குடி, அக். 10: மின் கம்பங்களில் கட்டப் பட்டுள்ள ஒயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 7 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லதா மகேஸ்வரி அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத் தின் உத்தரவின் படி, திருவாரூர் மாவட் டத்தில் இருந்து வரும் மின் கம்பங்கள் மற்றும் மின்வாரியத்திற்கு சொந்த மான உடைமைகள் மீது இழுத்துச் செல்லப்படும் கேபிள் ஒயர்கள் மற்றும் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் பணி களை மேற்கொள்ள சிரமமாக இருப்பதாலும், மேலும், மின் விபத்துக்கள் ஏற் பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாலும் அவற்றை ஏழு நாட்களுக்குள் சம்ப ந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்ற வேண்டும்.
தவறும் பட்சத்தில் மேற்படி கேபிள் வயர்கள் ,விளம்பர தட்டிகள் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் அகற்றப் படும் இவ்வாறு திருவாரூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

Tags : Mannargudi ,Board ,Latha Maheshwari ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா