- ஆரந்தங்கி வலபகண்ட்
- அறந்தாங்கி
- புதுக்கோட்டை மாவட்டம்
- ஆர்த்தனங்கி கள அரசு நிறுவனம்
- ஜனாதிபதி
- ஆனந்த்
- நகர் சபா
- துணை
- முத்து
அறந்தாங்கி, அக். 10: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி களப்பக்காடு என்ஜிஓ.காலனி பகுதியில் புதிய ரேஷன் கடையை அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் ஆனந்த் திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணை தலைவர் முத்து, நகர் மன்ற உறுப்பினர் கிருபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்டுள்ள ரேஷன்கடையில் களப்பக்காடு என்ஜிஓ காலனி ,சிலோன் காலனி, தென்றல்நகர்,பாரதி நகர், ஐயப்பாநகர், புதுநகர், அண்ணாமலையார் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெறலாம்.
