- அமைச்சர்
- திருமுருகன்
- ஆவையார் அரசு மகளிர் கல்லூரி
- காரைக்கால்
- அரசு மகளிர்
- கல்லூரி
- Najim
- சட்டமன்ற உறுப்பினர்
- காரைக்கால் தெற்குத் தொகுதி
- காரைக்கால் ஓலவையார் ஊராட்சி
காரைக்கால்,அக்.10: காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கல்லூரியில் ரூ.3 கோடி செலவில் பல்நோக்கு மினி உட்புற மண்டபம் அமைக்கப்படும் என நாஜிம் எம்எல்ஏ தெரிவித்தார்.
காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் கூறும்போது, காரைக்கால் ஒளவையார் அரசு மகளிர் கல்லூரியில் பல்நோக்கு மினி உட்புற மண்டபம் கட்ட வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து தீவிர நடவடிக்கையால் ஔவையார் அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகளுடைய வேண்டுகோளை ஏற்று அக்கல்லூரியில் பல்நோக்கு மினி உட்புற மண்டபம் கட்டுவதற்கு ரூ.3.04 கோடிக்கு அரசு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.
