×

டூவீலர் திருடிய வாலிபர் கைது

 

 

மதுரை அக். 10: ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் விஜயராகவன். இவர் தனது மனைவியை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதையடுத்து மனைவியை பார்க்க டூவீலரில் வந்த அவர், வாகனத்தை மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சென்றார். சிறிதுநேரம் கழித்து வந்த போது அவரது டூவீலர் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த அவரது புகாரின் ேபரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, டூவீலர் திருடிய வாடிப்பட்டி தாலுகா தெத்தூரை சேர்ந்த கண்ணன் (26) என்பவரை கைது செய்தனர்.

Tags : Madurai ,Vijayaraghavan ,Sathankulam West Street ,Ramanathapuram district ,Madurai Government Hospital ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா