×

புதிய சட்டம் கொண்டு வரப்படும் பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு

பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவரும், பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று கூறுகையில்,’ எங்கள் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலும் அரசு வேலை உள்ள ஒரு உறுப்பினர் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டம் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட 20 நாட்களுக்குள் கொண்டு வரப்படும்’ என்று தெரிவித்தார்.

Tags : Bihar ,Tejashwi Yadav ,Patna ,Rashtriya Janata Dal ,Bihar Assembly ,Bharatiya Janata Party ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...