வாலிபர் தற்கொலை

திருச்செங்கோடு, டிச.27: திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்தவர் தினேஷ்குமார்(21). திருமணமாகாத இவர் அப்பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கியிருந்தார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும், அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து பார்த்தபோது, தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு டவுன் போலீசார், தினேஷ்குமார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>