×

 கடந்த 2 ஆண்டுகளில் 93 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது  மாவட்ட கலெக்டர் காந்த் தகவல் ேதாப்புத்துறை அரசு பள்ளியில் பழங்கால பறவைகள் குறித்த கண்காட்சி

வேதாரண்யம், அக். 9: வேதாரண்யம் அடுத்து தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சங்க இலக்கியத் தாவரங்கள், மருத்துவ மூலிகைகள், வலசை வரும் பறவைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. தமிழ்நாடு வனத்துறை, வேதாரண்யம் வனச்சரகம் கோடியக்கரை மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, தோப்புத்துறை ஆகியவை இணைந்து வன உயிரின வார விழா முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களில் காணப்படும் அரிய தாவர வகைகளின் புகைப்படங்கள், இவற்றின் தமிழ்ப்பெயர், ஆங்கிலப்பெயர், தாவரவியல் பெயர்கள் ஆகிய விபரங்களுடன் கூடிய படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.வெப்ப மண்டல வறண்ட பசுமை மாறாக் காடுகளுக்கே உரிய மூலிகைத் தாவரங்கள்அவற்றின் தமிழ் மற்றும் தாவரவியல் பெயர்களுடன் கூடிய படங்கள் காட்சிப் படுத்தப்பட்டன.

உலகின் பல்வேறு திசைகளில் இருந்தும் கோடியக்கரைக்கு வலசை வரும் அரிய பறவைகளின் படங்கள் அவற்றின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களுடன் கூடிய படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. கோடியக்கரை வனத்துறையும் பள்ளி பசுமைப் படையும் இணைந்து நடத்திய பண்டைய மரபை நினைவூட்டும் 350க்கும் மேற்பட்ட அரிய உயிரின இனங்களின் படக் கண்காட்சியினை 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் கண்டு மகிழ்ந்தனர். பள்ளியில் இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் பொறுப்புத் தலைமையாசிரியர் கவிநிலவன், உதவித் தலைமை ஆசிரியை ஆனந்தி, பள்ளி பசுமைப் படை பொறுப்பாசிரியர்கள் கண்ணையன், ஆசிரியர் ரெங்கசாமி உடற்கல்வி ஆசிரியர் பொய்யாமொழி மற்றும் ஆசிரிய, பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், வனத்துறை சார்பில் வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையில் வனவர் இளஞ்செழியன் மற்றும் வனப் பணியாளர்கள் வேதமூர்த்தி, செந்தில், பிரகலாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : District Collector Kant Information Department Government School ,Vedaranyam ,State Model Secondary School of Horticulture ,Tamil Nadu Forest Department ,Vedaranyam Forest Farm ,Kodiakari and ,Government Model ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா