×

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் தேர் பவனி ஏராளமானோர் பங்கேற்பு

 

 

திங்கள்சந்தை, அக். 9: கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 102வது ஆண்டு திருவிழா தேர் பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா கடந்த 26ம் தேதி கோடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி, இரவு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 6ம் நாள் திருவிழாவில் திருப்பலி, தங்க தேர்ப்பவனி, அன்பு விருந்தும் நடந்தது. 8ம் நாள் திருவிழாவில் திருவிருந்து பெறும் சிறார்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தியானம், 9ம் நாள் விழாவில் முதல் திருவிருந்து சிறப்பு திருப்பலி, இரவு தேர்ப்பவனி நடந்தது.

Tags : Ter Bhavani ,St. Teresa ,Jesus ,Kandanwila ,Ter ,Bhavani ,Temple ,of the ,Child Jesus ,Temple of St. Teresa of the Child Jesus ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா