ரயில் நிலைய மரத்தில் வெல்டர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, டிச.26: திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனியை சேர்ந்தவர் ஜோசப்ராஜ். இவரது மகன் யாதேஷ்(20). ஐடிஐ படித்துள்ளார். வெல்டிங் வேலை செய்து வருகிறார். குடிப்பழக்கம் உள்ள இவர் தினமும் போதையில் வந்து பணம் கேட்டு பெற்றோரை மிரட்டுவது வாடிக்கையாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பிளேடால் கிழித்துக்கொள்வதாகவும், தூக்கில் தொங்கிவிடுவதாகவும் பெற்றோரை மிரட்டி வந்தார்.இந்நிலையில் கடந்த 22ம் தேதி இரவு வீட்டுக்கு வந்த யாதேஷ், செல்போனை சர்வீஸ் செய்ய தாய் புஷ்பாவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளார். அப்போது ஸ்கிப்பிங் கயிறுடன் வெளிேய சென்ற அவர் அன்றிரவு இரவு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மறுநாள் மதியம் பொன்மலை மஞ்சத்திடல் ரயில் நிலையம் பகுதியில் உள்ள மரத்தில் ஸ்கிப்பிங் கயிற்றில் தூக்கில் தொங்கினார். இது குறித்து அவ்வழியே சென்றவர்கள் அளித்த புகாரின் பேரில் அவரது உடலை கைப்பற்றிய பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>