வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே காங்கேயநல்லூரில் மழலையர் பள்ளி மேல்தளத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மழலையர் பள்ளி உள்ள கட்டடத்தின் மேல்தளத்தில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஏசியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தீயை அணைக்கும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.
