டெல்லி : தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசிய வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணிக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் கடிதம் அனுப்பி உள்ளார். வழக்கறிஞர் காலணி வீசியது உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் செயல் என அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
