×

தா.பழூர் மக்கள் ஏமாற்றம் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்

அரியலூர், டிச.26: 2அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரத்னா தலைமை வகித்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.கூட்டத்தில் விவசாயி செங்கமுத்து பேசியதாவது:
தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயல்களால் ஏற்பட்ட மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம், நெல், மிளகாய் உள்ளிட்ட அனைத்து பயிர்களும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மக்காச்சோளத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக மூட்டைக்கு ரூ.1,850 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரியலூர் பேருந்து நிலைய கட்டிடங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டள்ளன. எனவே, அவற்றை அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள், நிகழ்குடைகள் அமைக்க வேண்டும். அரியலூரில் உள்ள அனைத்து கடைகளின் பெயர் பலகைகளும் தமிழில் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அகில இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் தங்க.சண்முக சுந்தரம்: மாவட்டத்தில் உள்ள 2,322 நீர்நிலைகளையும் தூர்வாரவும், சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தனி அலுவலர் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகளை நியமனம் பாரபட்சம் இல்லாமல் மீட்க உரிய நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டும். சிமென்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் வெட்டி முடிக்கப்பட்ட சுரங்கங்களை நீர்த்தேக்கங்களாக மாற்ற வேண்டும். கண்டராதித்தம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் விஸ்வநாதன்: அரியலூர் வருகை தந்த தமிழக முதல்வர் முந்திரி விவசாயிகளுக்கு எந்த அறிவிப்பும் தராதது, அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளை பார்க்காமல் சென்றது வருந்ததக்கது. மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார். விவசாயிகளுக்கு பதிலளித்து பேசிய கலெக்டர் ரத்னா, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.கூட்டத்தில், டிஆர்ஓ ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முமை திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உட்பட பலர் இணையதளம் வாயிலாக கலந்து கொண்டனர்.

Tags : Dhaka ,
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!