- தமிழ்நாடு பெண்கள் கால்பந்து அணி
- திண்டுக்கல்
- 30வது தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப்
- நாராயண்பூர், சத்தீஸ்கர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கோவா
திண்டுக்கல், அக். 8: சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் 30வது தேசிய பெண்கள் கால்பந்து போட்டி இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி மிகவும் சிறப்பாக விளையாடி கோவா அணியை 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியின் பிரியதர்ஷினி 3 கோல்களும், செரோன் மற்றும் வினோதினி தலா ஒரு கோல் அடித்து அணியை வெற்றி பெற செய்தனர். இத்தகவலை கால்பந்து கழக செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
