×

இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்குத்திருட்டு குறித்து கையெழுத்து இயக்கம்

வலங்கைமான்,அக்.8: வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் வாக்குத்திருட்டு விவகாரம் குறித்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வாக்குத்திருட்டு விவகாரம் குறித்து, வலங்கைமான் வட்டார இளைஞர் காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் வட்டாரத் தலைவர் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.இளைஞர் காங்கிரஸ் நகர துணைத் தலைவி பிரியதர்ஷினி அகமது மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞர் காங்கிரஸ் திருவாரூர் மாவட்ட தலைவர் அஜித்குமார், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ராஜா சுடலை கனி, ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதல் கையெழுத்திட்டனர்.இதனை தொடர்ந்து வாக்குத்திருட்டை பற்றியும், போலி வாக்காளர்களை சேர்த்து, உண்மையான வாக்காளர்களை நீக்கியும், 70 வயதுக்கு மேற்பட்ட வாக்காளரை முதல் வாக்காளர்களாக சேர்த்ததையும், ஒரே வீட்டில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை சேர்த்தும்,,

ஜனநாயகத்தை சீர்கேடாகிய பிஜேபி அரசை கண்டித்து, அதற்கு துணை போன தேர்தல் கமிஷனையும், கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தி, வாக்குத்திருட்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதில் குழந்தை கவிஞர் ஐயப்பன், மருதமுத்து, இளைஞர் காங்கிரஸ் சஞ்சய், திருத்துறைப்பூண்டி வட்டாரத் தலைவர் பேரழகன், சட்டமன்றத் தலைவர் ரோஜர், மற்றும் இளைஞர் காங்கிரஸ், இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Youth Congress ,Valangaiman ,Valangaiman Regional Youth Congress ,Regional President ,Abdul Rahman ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா