×

வலங்கைமான் ஒன்றியத்தில் ஊராட்சி திட்ட ஒருங்கிணைப்பாளர், பொறுப்பாளர் ஆய்வு கூட்டம்

வலங்கைமான்,அக்.8: வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வலங்கைமான் ஊரா ட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்களுக்கு திருவாரூர் கூடுதல் ஆட்சியரின் (வளர்ச்சி) ஆய்வு கூட்ட அறிவுரையின்படி ஆய்வுக்கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி முரளி தலைமையில் நடைபெற்றது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி முன்னிலைவகித்தார். ஒன்றிய அலுவலக கணினி உதவியாளர் கார்த்திகேயன் e KYC எவ்வாறு பயன்படுத்துவது தொடர்பாகதொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினர் ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள்கலந்து கொண்டனர்.

 

Tags : Panchayat ,Valangaiman Union ,Valangaiman ,Panchayat Union ,Valangaiman Village Panchayat Union ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா