×

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பரவாய் கிராமத்தில் 800க்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்தன

குன்னம், அக். 8: பரவாய் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுல் 800க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பரவாய் கிராமத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் ஆய்வு செய்தார்.

பரவாய் , ஆண்டிக்குரும்பலூர் ஆகிய கிராம மக்கள் மகளிர் உரிமைத்தொகை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வீட்டு வசதி மற்றும் நகர் புற வளர்ச்சித் துறை,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், மற்றும் பல துறைகளில் இருந்து தங்களுக்கு தேவையான திட்டத்தில் மக்கள் மனுக்களை பதிவு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் தேவநாதன், வேப்பூர் வட்டார வள ர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், பி கே சேகர் குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை சமூக நல வட்டாட்சியர் சற்குணம் வேப்பூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அழகு நீலமேகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர், இம் முகாமில் 800 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

 

Tags : Stalin Project Camp ,Paravai ,Kunnam ,Vepur ,Block ,Development ,Officer ,Arivazhagan… ,
× RELATED 350 மாணவ, மாணவிகள் பங்கேற்பு பெரம்பலூர்...