×

சீர்காழி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

சீர்காழி, அக்.8: சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் என சீர்காழி மின்சார வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பின்னர் அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில், அரசூர், எட மணல், துணை மின் நிலையங்களில் இன்று 8ந் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வைத்தீஸ்வரன்கோயில், சீர்காழி, புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம்,

ஆத்துக்குடி,திருப்புங்கூர், தென்பாதி பனமங்கலம், கோயில்பத்து, கொள்ளிட முக்கூட்டு விளந்திட சமுத்திரம் கற்பகம் நகர், புதிய பழைய பேருந்து நிலையம், புத்தூர் எருக்கூர் மாதிரவேலூர், வடரங்கம், அகணி, குன்னம், எடமணல், திட்டை, செம்மங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

 

Tags : Sirkazhi ,Sirkazhi Electricity Board ,Executive Engineer ,Murthy ,Mayiladuthurai ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா