- கரூர்
- விழுப்புரம்
- காங்கிரஸ்
- கே. கே. கரூர்
- எஸ். அலகிரி
- இந்திய தேர்தல் ஆணையம்
- பஹியா யூனியன் மாநிலம்
- விதபுரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் குழு
விழுப்புரம், அக். 8: கரூர் துயர சம்பவத்தில் தவெகவுக்கு அரசியல் அனுபவம் இல்லாததால் பயந்து ஓடிவிட்டார்கள் என காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்குதிருட்டை கண்டித்து இந்திய தேர்தல் ஆணையம், ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடந்தது. மாவட்ட தலைவர் சீனுவாசக்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குலாம்மொய்தீன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, செல்வராஜ், தயானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.எஸ் அழகிரி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், கரூர் துயர சம்பவம் இயல்பாக நடந்த விபத்து, சதித்திட்டம் ஏதும் இல்லை என்று திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அவரது கருத்து சரியானது தான். விபத்து நடந்த அன்றே முதல்வர், எந்தவொரு அரசியல்கட்சி தலைவர்களும் தன்னுடைய தொண்டர்கள் இறந்துபோக வேண்டுமென்று விரும்பமாட்டார்கள். ஏதோவொரு விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருப்பதாக கூறினார். முதலமைச்சர் யார் மீதும் குற்றம் சுமத்தவில்லை. மாவட்ட ஆட்சியர், எஸ்பி மீதும் குற்றம் இருக்கிறது. விஜய் கட்சியே கேட்டிருந்தால்கூட அவர்கள் அனுபவமில்லாதவர்கள். காவல்துறை, ஆட்சியர், நீங்கள் கூட்டும் கூட்டத்திற்கு ஒதுக்குபுறமாக வைத்து ெகாள்ளுங்கள் என கூறியிருக்க வேண்டும். தவெகவிற்கு அரசியல்அனுபவம் கிடையாது. பயந்து விலகி ஓடியிருக்கிலாம். அதை வைத்து அவர்களை கோழை, வீரன் என்று சொல்லமுடியாது. அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள். நாங்கள், கரூர் சென்றிருந்தபோது கவனமாக ஆராய்ந்து பார்த்தோம். ஒரே காரணம் அதீதமான கூட்டம். எல்லோருடைய எதிர்பார்ப்புகளை தாண்டி அங்கு கூட்டம் வந்துவிட்டது, என்றார்.
