×

கூட்டப்புளி கிராமத்தில் தூண்டில் வளைவு இன்பதுரை எம்எல்ஏ முதல்வரிடம் மனு

பணகுடி, டிச. 26: கூட்டப்புளி கிராமத்தில் தூண்டில் வளைவு விரைவாக அமைக்க  வேண்டும் என இன்பதுரை எம்எல்ஏ தலைமையில் கிராம மக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று நெல்லை திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ராதாபுரம் தொகுதி கூட்டப்புளி கிராம மீனவ மக்கள், இன்பதுரை எம்எல்ஏ தலைமையில் சந்தித்து  கோரிக்கை மனு அளித்தனர். மனு விவரம்: நெல்லையில் நடந்த வ உ சிதம்பரனார் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கூட்டப்புளி கிராமத்தில் தூண்டில் வளைவு அமைத்துதரப்படும் என உறுதியளித்தார். ஆனால், அது இன்றளவு வரை நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களாகிய நாங்கள், கடலில் ஏற்படும் அரிப்பால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே, இனியும் தாமதமின்றி உடனடியாக  தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனு கொடுக்கும் நிகழ்ச்சியின்போது மனுவேல், எட்வின், ரோசாரி, அடைக்கலம், பன்னீர்செல்வம், அகிலன், சுஜித் உள்ளிட்ட மீனவப் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர். இதனிடையே திசையன்விளை வட்டார விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ராஜன், ராஜபாண்டி, ஆனந்தகுமார், விஜயராஜன், மரிய மிக்கேல், அருள்ராஜ் உள்ளிட்டோர்  இன்பதுரை எம்எல்ஏ தலைமையில் முதல்வரைச் சந்தித்து மனு அளித்தனர்.  அதில் திசையன்விளை, ராதாபுரம் பகுதிகளில் மட்டும் மிகக் குறைந்த அளவே மழை பெய்துள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. அத்துடன் விவசாய பணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.  எனவே மணிமுத்தாறு அணையின் 4வது ரீச் மூலம் ஏற்கனவே திறந்துவிடப்பட்டுள்ள நீரை திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள சுவிசேஷபுரம்குளம் மற்றும் ஆயன்குளம் படுகைக்கு முன்னுரிமை அளித்து அக்குளங்களில் நீர் நிரப்புவதற்கு ஏதுவாக சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர். இவ்விரு மனுக்களையும் பெற்றுக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி  உடனடியாக இதுகுறித்து பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags : MLA ,village ,Koottappuli ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...