கரூர்: கரூர் துயரம் குறித்து விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 27ம் தேதி கரூரில் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். கரூர் துயரம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. கரூர் துயரம் குறித்து முழுமையாக விசாரித்து யார் பொறுப்பு என்று ஆணையம் அறிக்கை அளிக்கும். அருணா ஜெகதீசன் ஆணையம் 3 மாதத்துக்குள் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.
