×

சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு..!!

சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்தித்து வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிற்கு தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர், தமிழக பாஜகவின் மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக பாஜக சார்பில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரச்சார கூட்டம் தொடங்க உள்ளது.

வரும் 12ம் தேதி பிரச்சாரக் கூட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் தொடங்கி வைக்க உள்ளனர். அத்தகைய பிரச்சார கூட்டத்தின் முன்னோட்டமாக கூட்டணி கட்சியின் தலைவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என தேசிய பாஜகவின் தலைமை முடிவு செய்திருந்தது. அந்த அடிப்படையில் அதிமுக கூட்டணில் இருக்க கூடிய நிலையில், எடப்பாடி பழனிசாமியும் அந்த பிரச்சாரத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என அழைப்பு விடுப்பதற்காகவும், வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாஜக எந்தெந்த இடங்களில் போட்டியிட வேண்டும்.

கூடுதல் தொகுதிகள் ஒத்துக்கிட வேண்டும். என்பது குறித்தான முதற்கட்ட ஆலோசனையும் இன்றைய தினம் தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக உள்ள பைஜெயந்த் பாண்டா என்ற முக்கிய நிர்வாகி இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வருகை தந்துள்ளார். அவரோடு பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜகவின் மாநில துணை தலைவர் உள்ளிட்ட 3 பேர் மட்டும் தற்போது எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

Tags : BJP ,Edappadi Palaniswami ,Chennai ,Tamil Nadu ,AIADMK ,General ,Greenways Road ,
× RELATED இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி –...