×

பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு

டெல்லி : பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சிலை கடத்​தல் தடுப்​புப் பிரி​வில் ஐ.ஜி.​யாக பொன்​ மாணிக்​கவேல் பணி​யாற்​றிய​போது, டிஎஸ்பி காதர் பாட்ஷா உள்​ளிட்​டோர் சிலை          கடத்​தலுக்கு உடந்​தையாக இருந்​த​தாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது.  இதற்​கிடையே, பொன்​ மாணிக்கவேல் மீது பல்​வேறு குற்​றச்​சாட்​டு​களை கூறி, உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் காதர்​பாட்சா மனு தாக்​கல் செய்​தார். இந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், பொன்​   மாணிக்​கவேல் மீது வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கு​மாறு சிபிஐ-க்கு உத்​தர​விட்​டது. அதன்​பேரில், அவர் மீது சிபிஐ வழக்​குப்​ப​திவு செய்​து, மதுரை மாவட்ட கூடு​தல் தலைமை குற்​ற​வியல் நீதி​மன்​றத்​தில்          குற்​றப்​பத்​திரி​கையை தாக்​கல் செய்​தது.

இதற்​கிடையே, தன் மீது பதிவு செய்​யப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக் கோரி​யும், வழக்​கின் குற்றப்பத்திரிகை நகலை தனக்கு வழங்க உத்​தர​விடு​மாறும் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் பொன்​ மாணிக்​கவேல் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி மஞ்​சுளா, பொன்​       மாணிக்​கவேல் மீது பதி​வான வழக்கு மற்​றும் குற்​றப்​பத்​திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனிடையே பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை ரத்துசெய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காதர்​பாட்சா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்தபோது பழிவாங்கும் நோக்கில் பொன் மாணிக்கவேல் தன் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக அவர் மனுவில் குற்றம் சாட்டி உள்ளார். இந்த நிலையில், தன்னுடைய தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என பொன் மாணிக்கவேல் கேவியட் மனு தாக்கல் செய்தார்.

Tags : Supreme Court ,High Court ,Pon Manickav ,Delhi ,IG ,Idols Detention Prevention Division ,DSP ,Kader Badsha ,
× RELATED ஆஸ்கர் விருதுக்கு ஹோம்பவுண்ட் இந்தி படம் தேர்வு