×

கரூர் சம்பவம் குறித்து நீதிமன்றம் சொன்னது சரி: அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இன்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பல்வேறு பிரச்னைகள் நடைபெற்று வருகிறது. வெள்ளம் வந்தது. அப்போது வராத பாஜக எம்பிக்கள் குழு உடனடியாக இந்த நிகழ்வுக்கு வருவதற்கு காரணம் என்ன என்று முதல்வர் நேற்று கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் கூறியதுதான் உண்மை நிலைமை. கரூர் துயர சம்பவம் குறித்து உயர் நீதிமன்றம் சரியாகத்தான் கூறி இருக்கிறது.

விஜய் நேரில் வந்து பார்க்கவில்லை என பத்திரிகை மற்றும் ஊடகங்கள் கூறுகிறது. விஜய் கூட்டத்திற்கு அனுமதி வாங்கியவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Karur incident ,Minister ,Nehru ,Trishi ,K. N. ,Nehru Church ,Tamil Nadu ,BJP ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!