×

மருத்துவ முகாம்

திருப்பூர், அக். 4: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் உயா்ந்து வருகிறது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முக்கியம். இதுபோல் மாற்றுத்திறனாளிகளின் ஊன சதவீதமும் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இதற்காக மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கலெக்டா் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த முகாமில் 100க்கும் மேற்பட்டவாகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனா். மேலும், உதவித்தொகை, வாகனம் உள்ளிட்டவைகளை கேட்டும் மனு கொடுத்து சென்றனா்.

 

Tags : Medical Camp ,Tiruppur ,Disabled Welfare Department ,
× RELATED இ-சேவை மையத்தில் லேப்டாப் திருடியவர் கைது