- மதுக்கரை
- மனோஜ் குமார்
- ஒத்தக்கால் மண்டபம்
- பிரீமியர் மில்
- கோயம்புத்தூர்
- மலுமிச்சம்பட்டி
- கோவை, பொள்ளாச்சி தேசிய…
மதுக்கரை, அக்.4: கோவை அருகே ஒத்தகால் மண்டபம், பிரிமியர் மில் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (34), ஐ.டி ஊழியரான இவர், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், தனது உறவினருடன் பைக்கில் பின்னால் அமர்ந்து, மலுமிச்சம்பட்டியில் இருந்து, கோவை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக, ஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ள, சர்வீஸ் ரோடு பிரியும் இடத்தில் சென்டர் மீடியன் தடுப்பு சுவரில் கட்டுப்பாட்டை இழந்த பைக் வேகமாக மோதியது. இதில் பின்னால் அமர்ந்து வந்த மனோஜ்குமார் படுகாயம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து, கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து, மதுக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்துகின்றனர்.
