×

கஜா புயலில் கூரை வீடுகள் சேதம் புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தர கோரி ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, டிச.25: திருத்துறைப்பூண்டியில் கஜா புயலில் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தாசில்தார் அலுவலகம் முன் கண்டன பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற தொகுதி செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். மண்டல அமைப்பாளர் வேலுகுணவேலன் பேரணியை துவக்கி வைத்தார். நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, கருத்தியல் மாநில துணை செயலாளர் அமுதன் துரயைரசன் ஆகியோர் பேரணியை முடித்து வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னதாக டாக்டர் அம்பேத்கர் சிலையிலிருந்து பேரணி புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக தாசில்தார் அலுவலகம் வந்தடைந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நத்தம் மனையில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், தொடர் மழையால் வேலை இழந்தவர்களுக்கு ரூ 10,000 நிவாரண தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Tags : Demonstration ,concrete houses ,storm ,roof houses ,
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...