×

வி.சி.கவினர் திரண்டனர் மன்னார்குடி அருகே

மன்னார்குடி, டிச.25: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மறவாக்காடு ஊராட்சிக்குட்பட்ட சித்தேரி, சோழநதி கிராமங்களில் 2017 - 2019 ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் வீடுகள் கட்டப்பட்டது. தனி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கீழ் இப்பணிகள் நடந்தது. இத்திட்டத்தின்கீழ் சித்தேரி, சோழநதி கிராமங்களை சேர்ந்த 152 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 121பேருக்கு வீடுகள் கட்டப்பட்டு விட்டதாக ரெக்கார்டுகளில் உள்ளது. ஆனால் 35 நபர்களுக்கு மட்டுமே வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் சித்தேரி கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ், மேகநாதன், கொண்ணாம்பாள், ராமன், சோழநதி கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன், தனபால் உள்ளிட்ட 86 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படவில்லை. ஆனால் அவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதாக கூறி பயனாளிகள் பெயரில் போலி ஆவனங்கள் தயார் செய்து கோடிக்கணக்கில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பயனாளிகள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் பாதிக்கப்பட்டவர் களிடம் கூறப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் மன்னார்குடி ஒன்றியம் தலையாமங்கலம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தில் 140 வீடுகள் மற்றும் 215 கழிவறைகளை காணவில்லை என பாதிக்கப்பட்ட 22 நபர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து கர்ணாவூர் ஊராட்சியில் வேங்கைபுரம், அரவத்தூர், தருசுவேலி, தேவேந்திரபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் 60க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள் மற்றும் கழிவறைகள் கட்டி தாராமலே கணக்கு காட்டப்பட்ட சம்பவம் அம்பலத்திற்கு வந்தது. இதையடுத்து, அப்போதைய மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின் பேரில் கூடுதல் கலெக்டர் கமல்கிசோர், ஊரக வளர்ச்சி முகமை உதவித்திட்ட அலுவலர் பொன்னியின் செல்வன் ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பயணளிகளின் பட்டியலை கையில் வைத்து கொண்டு கிராமம் வாரியாக ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டது. அக்குழு அளித்த அறிக்கையின் பேரில் அதிகாரிகள், தற்காலிக ஊழியர்கள் என 7 பேர்கள் அப்போதைய மாவட்ட கலெக்டரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் மறவாக்காடு ஊராட்சிக்குட்பட்ட சித்தேரி, சோழநதி கிராமங்களிலும் முறைகேடுகள் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : VC Kavinar ,Mannargudi ,
× RELATED மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு...