×

தவெக நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நாமக்கல்லில் த.வெ.க. தலைவர் விஜய், செப்டம்பர் 27ம் தேதி பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தான் எந்த குற்றமும் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக வழக்கில் தன்னை சேர்த்துள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்த ஒரே காரணத்துக்காக தனக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ், அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்வதாக கூறி அனுமதி பெற்றவர் மனுதாரர். அவரது கட்சியினரின் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இது தவிர பொது சொத்துகள் சேதப்படுத்தியதாக மேலும் எட்டு வழக்குகள் அவருக்கு எதிராக பதியப்பட்டுள்ளது எனக்கூறி, சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் தாக்கல் செய்தார். இவற்றை ஆய்வு செய்த நீதிபதி, கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா என சரமாரியாக கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, தலைமறைவாக உள்ள தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமாரை கைது செய்ய நாமக்கல் இன்ஸ்பெக்டர் கபிலன் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

Tags : T.V.K. ,Namakkal ,District Secretary ,Satish Kumar ,Chennai ,Vijay ,
× RELATED திற்பரப்பு அருவியில் குளு குளு சீசன்: பயணிகள் உற்சாகம்