×

விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பு வைத்து நூதன போராட்டம்

மன்னார்குடி, டிச. 25: காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பு ஊதி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரங்களை இழந்து கடும் பொரு ளாதார நெருக்கடியில் ஏழை, எளிய நடுத்தர மக்கள் வேதனையில் இருந்து வருகின்றனர். தற்போது அதிலிருந்து அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடந்த 15 நாட்களில் மத்திய அரசு இரண்டு முறை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே பெட்ரோல் டீசல் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிப் படைந்துள்ளனர். இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வால் இல்லத்தரசிகளும் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. கேஸ் விலை உயர்வால் சாமானிய மக்கள் சிலிண்டர் வாங்க முடியாத சூழல் உருவாகி உள்ளது.

இதனால் கிராமப்புறங்களில் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏழை எளிய நடுத்தர மக்களை வெகுவாக பாதிக்கும் சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தி மன்னார்குடி பெரியார் சிலை அருகில் இந்திய தேசிய மாதர் சங்கத்தினர் பாஜக அரசை கண்டித்தும், சிலிண்டருக்கு மாலை அணிவித்து, விறகு அடுப்பு ஊதியும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வனிதாதேவி தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பாஸ் கரவள்ளி, ஒன்றிய செயலாளர் பூபதி, நகர செயலாளர் மீனாம்பிகை ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், உயர்த்தப்பட்ட விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

Tags :
× RELATED வாடகைக்கு பேசி ₹25 லட்சம் வாங்கிவிட்டு...