×

ராமநாதபுரம் வருகை வந்த முதல்வருக்கு சிறப்பு வரவேற்பு

ராமேஸ்வரம், அக். 4: ராமநாதபுரம் வருகை வந்த தமிழ்நாடு முதல்வருக்கு மாவட்ட மாணவரணி, மாநில தொழிலாளர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த முதல்வருக்கு ராமநாதபுரம் மாவட்ட நுழைவில் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முன்னிலையில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.சுரேஷ் தலைமையில் மாவட்ட மாணவரணி சார்பில் சால்வை கொடுத்து, பரிசளித்து முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் மாவட்ட துணை அமைப்பாளர்கள் கமலக்கண்ணன், பொன்மணிசங்கர், வசந்த், சண்முகபிரியா, சம்பத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராமேஸ்வரம் நகர் மன்ற தலைவர் ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் திரளாண தொண்டர்களுடன் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். மாநில தொழிலாளர் அணி சார்பில் மாநில துணை செயலாளர் அ.பாஸ்கரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ராமேஸ்வரம் பர்வதம் வார்டு செயலாளர் சுரேஷ், நகர் இளைஞர் அணி முனிஸ்குமார், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சன்முகநாதன், தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பெருமாள், இளைஞர் அணி நாதன்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

Tags : Chief Minister ,Ramanathapuram ,Rameswaram ,Tamil Nadu ,student union ,
× RELATED உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா