கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சை, டிச. 25: தஞ்சை மாவட்டத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதன்படி தஞ்சை ரயிலடியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்பி பரசுராமன் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், மாவட்ட பால்வளத்துறை தலைவர் காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒரத்தநாடு அடுத்த புதூர் பைபாஸ் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நகர செயலாளர் செல்வம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பாபநாசத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமமுக சார்பில் மாவட்ட நிர்வாகி ஜெயராமன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேராவூரணியில் எம்எல்ஏ அலுவலகத்தில் எம்ஜிஆர் படத்துக்கு எம்எல்ஏ கோவிந்தராசு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்எல்ஏ திருஞானசம்பந்தம், ஒன்றிய செயலாளர் கோவிஇளங்கோ மற்றும் பலர் பங்கேற்றனர். உதயசூரியபுரம் கடைவீதியில் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் துரை மாணிக்கம், சமக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் பேரை ராஜா மற்றும் பலர் பங்கேற்று எம்ஜிஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திருவையாறு தெற்கு அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் மாவட்ட அவைத்தலைவர் மணத்திடல் சுப்பிரமணியன் தலைமையிலும், முன்னாள் எம்எல்ஏ ரத்தினசாமி, ஒன்றிய செயலாளர் நீலமேகம் முன்னிலையில் கட்சியினர் ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். திருவையாறு வடக்கு அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமையில் ஊர்வலமாக சென்று திருவையாறு பேருந்து நிலையத்தில் எம்ஜிஆர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கல்லணை பகுதி ஆறுகளில்

மணல் கொள்ளை தடுக்கப்படுமா?

தஞ்சை  கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் காணொளி காட்சி மூலம் நடந்த குறைதீர்  கூட்டத்தில் பூதலூர் ஒன்றிய விவசாயிகள் பங்கேற்று பேசினர். அகில இந்திய  விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜீவகுமார் பேசுகையில்,  கல்லணை அருகே கோவிலடி உள்ளிட்ட பகுதிகளில் ஆறுகளில் மணல் கொள்ளை நடப்பதை  தடுக்க வேண்டும். அக்னிஆறு டிவிஷனில் அடையாளப்படுத்தப்படும் பூதலூர் தாலுகா  கடையக்குடி ஏரியை பட்டுக்கோட்டை டிவிஷனில் இருந்து தஞ்சை அல்லது திருச்சி டிவிஷனுக்கு மாற்ற வேண்டும். வாழை பயிர் இழப்புக்கு காப்பீடு கிடைப்பது  அரிதாக உள்ளது. கஜா புயலில் ஏற்பட்ட சேதம் கணக்கெடுப்பு நடத்தியும்  ஆச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் காப்பீடு இதுவரை வழங்கவில்லை. அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையிலிருந்து கரும்பு சாகுபடியாளர்களுக்கு 2015- 16 ஆண்டுக்கு  வரவேண்டிய தொகை 5 ஆண்டுகள் கடந்தும் வரவில்லை. எனவே வட்டியுடன் தாமதமின்றி  வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கனமழை காரணமாக பாலையப்பட்டி பகுதியில்  சேதமான கடலை, சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு காப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய  வேண்டும். சம்பா நெல் அறுவடை துவங்க உள்ளதால் கொல்முதல் நிலையங்களில்  சாக்கு, சணல் உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். வெண்ணாறு பிரிவு வண்ணாத்திவாய்க்கால் (எ) வலம்புரி வாய்க்காலில்  இருந்து ஒட்டமண்டபம் வழியாக தெற்கு முகமாக வெண்ணாற்றில் தண்ணீர் வடியும்  வகையில் வடிகால் வேண்டும் என்றார்.

Related Stories:

More
>