×

தவெக தலைவர்கள் செயல்பாடு சரியில்லை: நடிகர் தாடி பாலாஜி பேட்டி

கரூர்: கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாயினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நடிகர் தாடி பாலாஜி நேற்று முன்தினம் கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கரூர் சம்பவத்தால் தவெக தலைவர் விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இச்சம்பவம் விஜய்க்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும். அவர் இப்போது தான் கட்சி ஆரம்பித்துள்ளார். அவருக்கு தெரியவில்லை என்றாலும் 2ம் கட்ட தலைவர்கள் தெரிய வைக்க வேண்டும்.

கட்சியின் 2ம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் அஜாக்கிரதையாக உள்ளனர். அவர்கள் தான் பிரசார இடத்தை பார்த்து ஆய்வு செய்துள்ளனர். பிரசாரம் மேற்கொள்ளும் நேரத்தை முன்கூட்டியே விஜயிடம் அவர்கள் தெரிவித்திருக்க வேண்டும். 2ம் கட்ட தலைவர்களின் செயல்பாடு அதிருப்தியாக உள்ளது. தவெகவில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றார்.

Tags : Beard Balaji ,Karur ,Vijay Prasara ,Mundinam Karur ,
× RELATED திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை..!!