×

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் தென்கலை, வடகலை பிரிவினர் கடும் மோதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் ஸ்தோத்திரம் பாடல்கள் பாடுவதில் வடகலை, தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. இக்கோயிலில் நடைபெறும் துப்புல் வேதாந்த தேசிகர் மங்கள சாசன உற்சவத்தில் வேதாந்த தேசிகர் முன்பு ஸ்தோத்திரம் பாடல்கள் பாடுவது மரபு என சொல்லப்படுகிறது. நேற்று மாலை நடைபெற்ற வைபவத்தில் வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார் வடகலை பிரிவினரும் ஸ்தோத்திரம் பாடலை பாடினார். இதனை தொடர்ந்து பெண்களின் பிரிவினரும் ஸ்தோத்திரம் பாடல் பாட முற்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வடகலை பிரிவினர் அனுமதி அளித்தது என் என்று கேட்டு கோயில் உதவி ஆணையர் ராஜலட்சுமியோடு வாக்கு வாதம் செய்தனர். தகவல் அறிந்து வந்த விஷ்ணு காஞ்சிபுரம் போலீசார் அவர்களை சமாதானம் படுத்த முயன்றனர். தென்கலை பிரிவினர் ஸ்தோத்திரம் பாட கடந்தாண்டே தடை தேசிகர் சாட்சி முறை உற்சவத்தின் போது கோயில் நிர்வாகம் தடை விதித்ததாக சுட்டிக்காட்டி வடகலை பிரிவினர் வாக்குவாதம் செய்தனர். அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதாக கூறியதை ஏற்காதவர்கள் நீதிமன்றத்தை நடப்போவதாக கூறினார். பெண்கள் பிரிவினர் பாடல்கள் பாடாமல் கலைந்து சென்றனர்.

Tags : Southern ,Varadaraja Perumal temple ,Kanchipuram ,Northern ,Thuppul ,Vedanta ,Desikar ,Mangala Sasana Utsavam ,Vedanta Desikar ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!