×

அரசலூர் ஏரிக்கரை அருகில் கிணற்றின் சுற்றுச்சுவர் சேதம் கம்பிவேலி அமைக்க அதிகாரி உத்தரவு

பெரம்பலூர், டிச. 25: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசலூரில் பெரிய ஏரி அருகே 2015- 2016ம் ஆண்டு வெட்டப்பட்ட 80 அடி ஆழமுள்ள குடிநீர் கிணறு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக ஏரி பகுதியில் உள்ள கிணற்றுக்குள் சுவரை அறுத்து கொண்டு மழைநீர் உட்புகுந்தது, அப்போது கிணற்றின் கரையில்இருந்த மின்மோட்டாரும் கிணற்றுக்குள் விழுந்ததுடன் கிணறில் 70 அடி உயரத்துக்கு நிரம்பியிருந்த குடிநீரும் சேறும் சகதியுமாக மாறி சுற்றுச்சுவர் சேதமடைந்தது. இந்த தகவல் கிடைத்ததும் வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் சென்று வேறு கிணற்றிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்ததுடன் சேதமடைந்த இந்த கிணற்றின் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று கூறினார். மேலும் கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க உத்தரவிட்டார்.

Tags : officer ,Arasalur Lake ,
× RELATED காட்டுமன்னார் கோயில் அருகே...