×

மதுவிலக்கு அமலாக்க பணியில் சிறப்பான செயல்பாடு 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தியடிகள் காவலர் விருது: குடியரசு தினத்தன்று முதல்வர் வழங்குகிறார்

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுவிலக்கு அமலாக்கப் பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக நடராஜன் (காவல் ஆய்வாளர், மத்திய நுண்ணறிவுப் பிரிவு, விழுப்புரம் மண்டலம்), சத்யா நந்தன் (காவல் உதவி ஆய்வாளர், ஆரோவில் காவல் நிலையம், விழுப்புரம் மாவட்டம்) மணிகண்டன் (காவல் உதவி ஆய்வாளர், சின்னசேலம் காவல் நிலையம், கள்ளக்குறிச்சி மாவட்டம்), நடராஜன் (காவல் உதவி ஆய்வாளர், புத்தூர் காவல் நிலையம், கடலூர் மாவட்டம்) மற்றும் கண்ணன் (தலைமைக் காவலர்-மத்திய நுண்ணறிவுப் பிரிவு, சேலம் மாவட்டம்) ஆகியோருக்கு 2025ம் ஆண்டுக்கான காந்தியடிகள் காவலர் விருது வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த விருது, முதலமைச்சரால் 2026ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் குடியரசு தினத்தன்று வழங்கப்படும். விருதுடன், பரிசுத்தொகையாக ரூ.40,000 ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Republic Day ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Natarajan ,Central Intelligence Agency ,Villupuram ,Zone ,Sathya Nandan ,Police Assistant Inspector ,Auroville Police Station ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...