×

கவுண்டம்பாளையம் மேம்பாலப் பணிகளுக்காக கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

கோவை, டிச. 25: மாவட்ட கலெக்டர் ராஜாமணி கூறியிருப்பதாவது: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் இரு மார்க்கமாகவும் செல்லும் வாகனங்கள் வரும் ஜனவரி 12ம் தேதி முதல் இரண்டு மாதங்களுக்கு கீழ்கண்ட மாற்றுப்பாதையில் இயக்கிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் : சாய்பாபா கோயில் - தடாகம் - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி புதுார் - கணுவாய் - அப்பநாயக்கன்பாளையம் - துடியலூர் - மேட்டுப்பாளையம். அல்லது  சாய்பாபா கோயில் - தடாகம் - வேலாண்டிபாளையம் - கே.என்.ஜி புதூர் - ஜி.என் மில்ஸ் - துடியலூர்- மேட்டுப்பாளையம். அல்லது டி.வி.எஸ் -ஜி.சி.டி - தடாகம் சாலை - கனுவாய் - துடியலூர் - மேட்டுப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை நோக்கி வரும் வாகனங்கள்:  துடியலூர் - வெள்ளக்கிணறு - உருமாண்டம்பாளையம் - உடையம்பாளையம் - மணியக்காரன்பாளையம் - கணபதி - காந்திபுரம். அல்லது கவுண்டர் மில்ஸ் - உருமாண்டம்பாளையம் - உடையப்பாளையம் - மணியக்காரன்பாளையம் - சங்கனூர் எரு கம்பெனி - காந்திபுரம் வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்

Tags : Traffic change ,road ,Coimbatore ,Mettupalayam ,Countampalayam ,
× RELATED ஓட்டு மெசின் வளாகத்தில் டிரோன் பயன்படுத்த தடை