×

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே சுற்றுலா சென்ற கார் தீப்பிடித்து 3 பேர் உயிரிழப்பு

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி காட்டன் மில் அருகே சுற்றுலா சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சம்சுதீன்(25), கொளத்தூர் ரிஷி, ஆவடி மோகன் உயிரிழந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் சாலையில் இருந்த சென்டர் மீடியன் மீது மோதி கார் தீப்பிடித்தது. சென்னையில் இருந்து மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது விக்கிரவாண்டி அருகே விபத்துகுள்ளானது. அப்துல் அஜீஸ், தீபக் ஆகியோர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Vikrawandi Cotton Mill ,Viluppuram district ,Samsuddin ,Kolathur Rishi ,Avadi Mohan ,Chennai Thiruvallikeni ,
× RELATED ஆவடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்