×

தமிழ்நாட்டுக்கான வரிப் பகிர்வாக ரூ.4,144 கோடியை விடுவித்தது ஒன்றிய நிதி அமைச்சகம்!

டெல்லி: பண்டிகைக் காலம் வருவதை ஒட்டி மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,01,603 கோடியை ஒன்றிய நிதி அமைச்சகம் விடுத்துள்ளது. தமிழ்நாட்டுக்கான வரிப் பகிர்வாக ரூ.4,144 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு தனது வரி வருவாயில் கிடைக்கும் நிதியில் குறிப்பிட்ட பகுதியை மாநிலங்களுக்கு பிரித்து வழங்கி வருகிறது. அதனடிப்படையில் பண்டிகைக் காலம் வருவதை ஒட்டி மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,01,603 கோடியை ஒன்றிய நிதி அமைச்சகம் விடுத்துள்ளது.

இந்த நிதியை தனது வளர்ச்சி மேம்பாடு மற்றும் நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு செலவினங்களுக்குப் பயன்படுத்தலாம். பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் 10ம் தேதி வழங்கப்படவிருந்த நிதியை 10 நாட்களுக்கு முன்னதாகவே இன்று ஒன்றிய அரசு விடுவித்துள்ளது.

தமிழ்நாட்டுக்கான வரிப் பகிர்வாக ரூ.4,144 கோடியை ஒன்றிய நிதி அமைச்சகம் விடுத்துள்ளது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வரிப் பகிர்வாக ரூ.18,227 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. பாஜக கூட்டணி ஆளும் பீகார் மாநிலத்துக்கு ரூ.10,219 கோடியை வரிப் பகிர்வாக விடுவித்துள்ளது.

மேலும் ஒன்றிய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “ஆந்திரம் – ரூ. 4112 கோடி, அருணாச்சல் – ரூ.1785 கோடி, அசாம் – ரூ. 3178 கோடி, சத்தீஸ்கர் – ரூ. 3462 கோடி, குஜராத் – ரூ. 3534, ஹரியாணா – ரூ. 1111 கோடி, ஹிமாசல் – ரூ. 843 கோடி, ஜார்க்கண்ட் – ரூ. 3360 கோடி, கர்நாடகம் – ரூ. 3705 கோடி, கேரளம் – ரூ. 3705 கோடி, மத்தியப் பிரதேசம் – ரூ. 7976 கோடி, மகாராஷ்டிரம் – ரூ. 6418 கோடி, மணிப்பூர் – ரூ. 727 கோடி, மேகாலயா – ரூ. 779 கோடி, மிசோரம் – ரூ. 508 கோடி, நாகாலாந்து – ரூ. 578 கோடி, ஒடிஸா – ரூ. 4601 கோடி, பஞ்சாப் – ரூ. 1836 கோடி, ராஜஸ்தான் – ரூ. 6123 கோடி, சிக்கிம் – ரூ. 394 கோடி, தெலங்கானா – ரூ. 2136 கோடி, திரிபுரா – ரூ. 719 கோடி, உத்தரகண்ட் – ரூ. 1136 கோடி. மேற்கு வங்கம் – ரூ. 7644 கோடி” வரிப் பகிர்வாக விடுக்கப்பட்டுள்ளது.

Tags : EU Finance Ministry ,Tamil Nadu ,Delhi ,EU government ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக விபி...