×

காதலியின் தந்தை மீது சரமாரி தாக்குதல்: ஒருவர் கைது

திருப்பூர்,அக்.1: திருப்பூர், மங்கலம் ரோடு, ஆண்டிபாளையம், வீராத்தாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (46). இவர் பனியன் நிறுவன தொழிலாளி. இந்நிலையில், பெருமாளின் மகள் சத்யா அருண் என்பவருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இதனை பெருமாள் கண்டித்துள்ளார்.

இதனால் சத்யா, அருணுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதில், ஆத்திரமடைந்த அருண், அவருடைய நண்பரான சபரிநாதன் (19), என்பவருடன் சேர்ந்து ரோட்டில் நடந்து சென்ற பெருமாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கல்லால் தாக்கி காயப்படுத்தினர்.

இதில் காயமடைந்த பெருமாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரிநாதனை கைது செய்தனர். மேலும் தலைமறைவான அருணை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags : Tiruppur ,Perumal ,Veerathal Kovil ,Mangalam Road, Andipalayam, Tiruppur ,Banyan Company ,Sathya Arun ,Sathya ,
× RELATED இ-சேவை மையத்தில் லேப்டாப் திருடியவர் கைது