×

அரசு அதிகாரியை எட்டி உதைத்த மளிகை வியாபாரி

தேன்கனிக்கோட்டை, டிச.25: அஞ்செட்டியில் சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் மணவாளன்(56). இவர், நேற்று முன்தினம் அஞ்செட்டியில் சுகாதார ஆய்வாளர்களுடன் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். ஆய்வின்போது, பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள், கடைகளில் கிருமி நாசினி வைக்காதவர்கள் மீது அபராதம் விதித்து, அதற்கான தொகை அதிரடியாக வசூலிக்கப்பட்டது. அப்போது, அங்கு மளிகை கடை நடத்தி வரும் அஞ்செட்டியைச் சேர்ந்த பச்சியப்பன் மகன் வெங்கடாசலம் என்பவர், சுகாதார மேற்பார்வையாளர் மணவாளனை தகாத வார்த்தையால் திட்டியுள்ளளார்.  இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், மணவாளனை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கீழே தள்ளி காலால் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த மணவாளன், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும், அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், மளிகை கடை உரிமையாளர் வெங்கடாசலத்தின் மீது எஸ்ஐ அருணகிரி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார். ஆய்வுக்காக சென்ற இடத்தில் அதிகாரியை காலால் எட்டி உதைத்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : grocer ,government official ,
× RELATED லிப்ட் கொடுப்பது போல் நடித்து அரசு அதிகாரியிடம் 40 ஆயிரம் பறிப்பு