×

‘ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால்…’

சென்னை: போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் வார விடுமுறையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகள் அதிகப்படியான கட்டணம் வசூல் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து சோதனைச்சாவடி ஆய்வாளர்கள் ஆகியோரை கொண்டு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மூலம், அதிகப்படியான கட்டணம் வசூல் செய்யும் மற்றும் அனுமதிக்கு புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகளை தீவிரமாக சோதனை செய்து அபராதம் விதித்தும், வாகனங்களை சிறைபிடித்தும் வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Transport ,Electricity Minister ,Sivashankar ,Ayutapuja ,Vijayatasamy ,Tamil Nadu ,
× RELATED கலைஞரால் உருவாக்கப்பட்ட முத்தமிழ்ப்...