×

கேங்மேன் பணி நியமனத்தில் முறைகேடுகளை விசாரிக்க கோரி தொமுச ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,டிச.25:  கேங்மேன் பணி நியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தொமுச சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பார்வை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தொமுச சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்சார வாரிய தொமுச செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட தொமுச கவுன்சில் துணை தலைவர் ரங்கசாமி சிறப்புறையாற்றினார். இதில் திமுக வார்டு செயலாளர் நித்தியானந்தம், மின்சார வாரிய தொமுச நிர்வாகிகள் ஜோதிபாசு, வடிவேல், மோகன், சரவணகுமார், விஜயன், மகேந்திரன், அமைப்பு சாரா தொமுச நிர்வாகிகள், பழனிச்சாமி, ராஜா, மோகன் குமார், ஹோட்டல் தொமுச மகேஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் வேண்டும். மின் விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க தொடர் பாதுகாப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்.,  தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும்.

மின்வாரியத்தில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்துவதால் தமிழக இளைஞர்கள் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பதால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கேங்மேன் பணிநியமனத்தில் நடந்துள்ள முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை சரி செய்து அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்சார வாரிய ஊழியர்கள், அலுவலர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstration ,gangmen ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்